அண்மையில் மெக்ஸிகோவில் நடைபெற்ற 17வது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் குற்றவாளிகள் என வரையறுக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அக்கருத்தரங்கில் கோரியுள்ள அவர் எய்ட்ஸ் நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் பாதுகாப்பற்ற பிரிவினர்களாகப் பாலியல் தொழிலாளர்கள், அரவானிகள், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் என ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்பொழுது அமைச்சரின் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமைச்சரின் பேச்சு பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்துவோரின் வரவேற்பைப் பெற்றுள்ள அதே சமயத்தில், ஓரினச் சேர்க்கையாளர்களின் சுதந்திரத்தை