பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
இருள் விலகுகிற நேரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களாக இந்தப் பள்ளிக்கு அதிகாலை நடக்கப் போய்க்கொண்டிருக்கிறேன். இருந்தும் தரை வெளுக்கும் நேரத்தை என்னால் மனதில் மட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அன்று காலை சரியான நேரம் என்று கணக்கிட்டவாறு நான் வெளியே வந்தேன். இருள் அடர்த்தியாக இருப்பதாகத் தோன்றியது. அங்கும் இங்குமாக மனித ஜீவன்களின் நிழல்களின் அசைவாகத் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பும் வாகனங்களின் பாய்ச்சல் ஆரம்பமாகவில்லை. இப்போது அவை முடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நான் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். இரு சக்கர வண்டிகளில் ட்யூஷன் படிக்கப் போகிற அன்றாடம் பார்க்கக் கிடைக்கிற முகங்கள் நினைவில் வந்தன. பிள்ளையார் கோவில் தாண்டிப் பள்ளியின் கீழ் வாசலுக்குப் போகும் வழியில் நான் அன்றாடம் பார்ப்பவர்கள் எல்லோரையும் பார்த்த