"அரசு நினைத்தால் காலச்சுவடையே நிறுத்த முடியும்"
காலச்சுவடு, ஆகஸ்ட் 2008இதழில்'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்ற சிறப்புப்
பகுதியை வெளியிட்டிருக்கிறது. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கான
தளமாகச் சிறுபத்திரிகைகள் தான் இருக்கின்றன. சிறுபத்திரிகைகளில் எழுதவே நான்
ஆசைப்படுகிறேன். காரணங்களின்றிப் பெரும் பத்திரிகைகளில் (முற்றிலும் வியாபார நோக்கம்
கொண்ட) எழுதக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். சிறுபத்திரிகைகள் மக்களிடம்
சென்று சேர வேண்டும் என்பது என்னுடைய பெரும் கனவுகளில் ஒன்று. அதேமாதிரி
சிறுபத்திரிகைகள் நிறைய வர வேண்டும் என்பதிலும் இந்தக் கனவும் ஆசையும் நிறைவேற
வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். நான் விரும்புகிற, நேசிக்கிற
சிறுபத்திரிகைகளின் செயல்பாடுகள் உண்மைக்கு மாறாக இருக்கும்போது, சிறுபத்திரிகைகள்
செய்கிற தவறுகளை அவற்றின் கவனத்திற்குக் கொண்டு செல்வது