முதல் வட்டத்தின் கடைசி எழுத்தாளர்
சோவியத் நாடிருந்தவரை அங்குச் செயல்பட்ட ரைட்டர்ஸ் யூனியன் என்ற அமைப்பை எழுத்தாளர் சங்கம் என்று மொழிபெயர்ப்பது அந்த அமைப்பின் அசாத்திய வலிமையை உணர்த்தாது. இருபதாம் நூற்றாண்டின் இரு மகத்தான ரஷ்ய எழுத்தாளர்களின் வாழ்க்கையை அது திசைமாற்றியது. போரிஸ் பாஸ்டர் நாக்கை அவர் காலத்தில் இந்த ரைட்டர்ஸ் யூனியனின் தலைவராக இருந்த ஷோலகோவ் கடுமையாகத் தாக்கிப் பேசியபின், அந்த எழுத்தாளர் மனமுடைந்து எந்த நேரமும்¢ நாடு கடத்தப்படுவோமோ என்று அஞ்சிய வண்ணமே உயிரைவிட்டார். இந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி மரணமடைந்த அலெக்ஸாண்டர் சோல்ட்னீட்ஸின் மீது அரசு நடவடிக்கை எடுத்துச் சிறையில் தள்ளியதுடன் அந்த யூனியன் அவருடைய படைப்புகளை நூலகத்திலிருந்து விலக்கியது. அவர் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த பிறகும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் குறுக்கிட்டுப் படைப்பு ஏதும் வெளியே வர முடியாது பார்த்துக் கொண்டது. அவர் எழுதிய நாடகங்களை மேடையேற்ற முடியாது செய்தது. "நான் அப்படி என்ன குற்றம் செய்தேன்?" என்று அவர் எழுதிய இரு கடிதங்கள் ஓர் எதேச்சதிகார அரசால் எப்படி ஓர் எழுத்தாளனை அவன் இல்லாதது போலச் செய்திட முடி