பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பிலக்கண ஆய்வெழுச்சி திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டறிந்து தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியதெனில், இருபதாம் நூற்றாண்டின் மொழியியல் தமிழ் இலக்கண மரபின் தனித் தன்மைகளை இனங்கண்டு காட்டியது. இந்த வரலாற்றில் சொற்றொடர் அமைப்புக் குறித்த நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கண முறையியலைக்கொண்டு தமிழ்த் தொடர்களை முதன்முதலில் ஆராய்ந்தவர் பேராசிரியர் அகத்தியலிங்கம்.
கணிதத்தில் இளநிலைப் பட்டமும் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்த அகத்தியலிங்கம் கணக்கியல் சார்ந்த மாற்றிலக்கண அணுகுமுறையைத் தமிழுக்கும் பொருத்திப்பார்க்கும் முன்னோடியானது தமிழுக்கு நல்லதொரு வாய்ப்பாயிற்று. 'A Generative Grammar of Tamil' எனும் தலைப்பில் பேராசிரியர் ஃபிரட் டபிள்யூ ஹவுஸ்ஹோல்டர் நெறியாண்மையில் அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்