விழிப்புணர்வின் அடையாளம் - மாறுபடும் பார்வை
சிறந்த எழுத்தாளர் என நான் கருதும் இமையம், "அரசு நினைத்தால் காலச்சுவடையே நிறுத்த முடியும்" என்று ஆணவத் தொனியில் மிரட்டல்விடுக்கிற மாதிரி எழுதியுள்ள எதிர்வினையைப் படித்து வியப்படைந்தேன். அதையட்டி ஆசிரியர் கண்ணன் அளித்த மறுமொழியைப் படித்தபோது இமையம் திமுகவில் இருப்பவர் என்பது தெரியவந்ததால் வியப்பதற்கு ஒன்றுமில்லை என உணரலானேன். 'சகவாச தோஷம்' என்பதாக ஒன்று உண்டு. அது யாரையும் விடுவதில்லை போலும்.
மிகக் குறுகிய காலந்தான் என்றாலும், நம் காலத்தின் தலை சிறந்த ஜனநாயகப் பண்பாளராக விளங்கிய அண்ணாவை மிக அணுக்கமாகக் காணும் அரிய வாய்ப்பினைப் பெற்றவன் நான். அவருடன் இரவும் பகலுமாகப் பல நாட்களைக் கழித்தவன். ஓர் அடைப்பக்காரனாக அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைந்தவன். தம்மை மிகமிக இழிவாகப் பேசுபவர்களைக்கூடப் பாராட்டிப் பேசி நாணமுறச் செய்யும் பெருமகன் அண்ணா. இதற்கு எத்தனையோ சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாக இன்னமும் இருந்துகொண்டிருப்பவன் நான். அவர் தோற்றுவித்த திமுக இன்று எவ்வாறாக இருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, தாங்கொணாத வருத்தமாக இருக்கிறது. இவ்வாறான