சுந்தர ராமசாமி: துணைநிற்கும் நினைவுகள்
வரும் அக்டோபர் 15ஆம் தேதியோடு சுந்தர ராமசாமி மறைந்து மூன்றாண்டுகள் கடந்திருக்கும். நினைவுகூர்தலின் துயரத்திலிருந்து, அவர் விட்டுச்சென்ற பணிகளைப் பொறுப்புணர்வோடு தொடர்வதன் மூலமே விடுபட முடியும் எனத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளனாக இயங்குவது குறித்து எனக்குள் நிலவிவந்த பதற்றங்களைத் தணித்தவர் என்ற வகையில் அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 1993இல்தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே என் பதற்றத்தை அடையாளம் கண்டுகொண்டுவிட்டவர் அவர். தனிப்பட்ட தோல்விகளாலும் தொடர்ந்து வந்த அவமானங்களாலும் நான் அப்பொழுது மிகச் சோர்ந்துபோயிருந்தேன். வாழ்வின்மீதும் மனிதர்கள் மீதும் வெறுப்பும் வன்மமும் மண்டிய ஒரு மனநிலையில் சுந்தர விலாசின் மாடியில் எதிரெதிராக அமர்ந்துகொண்டு உரையாடினோம். நான் ஓயாமல் புகைபிடித்துக்கொண்டிருந்தேன். இடைவெளியே இல்லாமல் பேசிக்கொண்டிருந்தேன். முழு உலகையும் அழித்துவிட வேண்டும் என்னும் ஆவேசம் என் சொற்களின் மீது கவிழ்ந்திருந்தது
மிக அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சு.ரா., பிறகு வெகு நிதானமாக என் கேள்விகளுக்குப் பதிலளித்தா