கேள்விக்குள்ளாகும் நேர்மை
காலச்சுவடு ஆசிரியர் திரு. கண்ணன் அவர்களுக்கு,
''பத்திரிகைகளே இல்லாமல் அரசாங்கம் மட்டும் அல்லது அரசாங்கமே இல்லாது பத்திரிகைகள் மட்டும் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நான் அரசாங்கமே இல்லாது பத்திரிகைகள் மட்டும் என்பதையே தேர்ந்தெடுப்பேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் ஒருமுறை கூறினார். ஆனால் அமெரிக்காவில் பத்திரிகைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இல்லாதுபோய் வெகுகாலமாகிவிட்டது. இந்திய நிலைமையும் அதிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை. குரலற்றவர்களின் குரலாக இருக்கும் பத்திரிகைகள் மிகச் சொற்பம். அத்தகைய சொற்பமான பத்திரிகைகளுள் ஒன்றாக காலச்சுவடு இருப்பதாகவே கருதுகிறேன்.
'காலச்சுவடுக்குத் தடை' சம்பந்தமாக இமையத்தின் எதிர்வினையையும் அதற்கான உங்கள் பதிலையும் படித்ததும் எனக்கு மிகுந்த வருத்தமே மேலிட்டது. 'கருத்து' அமைப்பிற்குக் கடிதம் எழுத வேண்டும் என்று முதலில் நினைத்த நான் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொண்டேன். தமிழக முதல்வரின் மகளான கனிமொழி இதன் அமைப்பாளர்களுள் ஒருவராக இருந்திராவிட்டால் இவ்வமைப் பிற்குக் கடிதம் எழுதுவது என்ற