ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் 'உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்' முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர். ஒரு ஜெருசலேம், ஒரு கிராமத்து ராத்திரிகள், காடு, இரவுகள் உடையும் முதலான பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், வனத்தின் குரல், நதிக்கரை மயானம், தெக்கத்தி ஆத்மாக்கள், ஈழக்கதவுகள் உள்ளிட்ட ஆறு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்ட மாணவர் தலைவர்களில் ஒருவரான பா.செ., முதலில் கல்லூரி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் ப