காலத்தின் கானல் - 8
17.2.1996, சனி
காலையில் சுமார் 25/30 கவிதைத் தொகுதிகளில் - 107 கவிதைகள், பசுவய்யா - நண்பர்கள் பெயரெழுதி அன்பளிப்புப் பிரதிகளுக்குக் கையெழுத்திட்டேன். எம்.கே. ஸானு எழுதிய
ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு படித்தேன். நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு என் மனதைச் சிறிது பாதித்திருப்பதை உணர்ந்தேன். பெரியாருடைய சிந்தனைகளுடன் இவரது சிந்தனையை ஒப்பிட்டுப் படித்துப்பார்க்க வேண்டும். வரலாறு சார்ந்து, சூழல் சார்ந்து படைப்புகளைப் படித்துப்பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்படவில்லை. என் படிப்பிலும் சிந்தனைகளிலுமுள்ள குறைகளைச் சிறிய அளவில் உணர முடிகிறது. போகப்போக ஆழமாக உணர முடியும். என்னைச் சரிசெய்துகொள்ள முடியும். என் சிந்தனையில் விரிவும் ஆழமும் கொள்ள முடியும். சென்ற வருடம் இந்த நாளில்தான் நாவல் எழுத ஆரம்பித்தேன். 300 பக்கங்க