கருணையின் நிறங்கள்
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினையட்டித் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளில் 1,405 பேர் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். திமுகழகத்தின் நிறுவனரும் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் மதிப்புமிக்க தலைவருமான அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தமிழக மக்களுக்கு மிக முக்கியமானதொரு கொண்டாட்டம். தன் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும் ஏழை எளிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியவர் அவர்.
காங்கிரஸ் முன்னிறுத்திய தேசியத்திலிருந்து முற்றாக வேறுபட்ட தொரு சமூக அரசியல் கோட்பாட்டை ஆதாரமாகக்கொண்டு அவரால் தொடங்கப்பட்ட திமுகழத்தின் ஆட்சியில்தான் 1967இல் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம் குறிப்பிட்ட அளவில் செயல்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் பல சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த அடிகோலியதன் மூலம் அரசு என்பதைச் சமூக நலனைப் பேண வேண்டிய ஒரு அமைப்பாக மாற்ற முயன்றார் அண்ணா.
அரசியலதிகாரத்திலிருந்த காங்கிரஸ் அரசுகள் கடைபிடித்து வந்த பல நடைமுறைகள் அண்ணாவின் ஆட்சியில் மாறுதல் களைச் சந்தித்தன. அவரது காலத்தில்தான் சிறைத் துறைச்