கமுக்கக் காதல் கொலைகள், 1863 – 1950
கட்டுரை
கமுக்கக் காதல் கொலைகள், 1863 – 1950
கோ. ரகுபதி
ஆய்வுக்காக, 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகத்தில், பிரித்தானிய-இந்தியக் காவல்துறையின் ஆண்டறிக்கைகளை (1877-1950) வாசித்தபோது ஆண்டுதோறும் நடைபெற்ற கொலைகளின் மொத்த எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்திருந்த ‘பாலியலுறவுக் கொலைகள்’ கவனத்தை ஈர்த்தன. சமகாலத் தமிழ்த் தினசரிகளும் ஆங்கிலப் பத்திரிகைகளும் சமூகத்தின் பொதுப் புத்தியும் ‘கள்ளக் காதல்’, ‘கூடா நட்பு’, ‘illegal relation’