எதிர்ப்பில் முகிழ்க்கும் பண்பாடு
தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஈழத் தமிழர்மீதான
போரை நிறுத்து என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் திருச்செந்தூரிலிருந்து
தொடர் வண்டியில் புறப்பட்ட 75 மாணவர்கள் 6.4.2009 அன்று காலை சென்னை எழும்பூர்
ரயில்நிலையம் வந்தடைந்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி முழக்கமிட்ட அவர்களை,
பலரும் வரவேற்று உற்சாகப்படுத்தி அனுப்பினர். எழும்பூர் வந்தபோது மாணவர்களை
வரவேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். ஈழத்தில் இனப்படுகொலை
உச்சத்தில் நடந்துகொண்டிருக்கிற வேளையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தேர்தல்
கூட்டணிகளுக்குள் முடங்கிவிட்டதை மாணவர்கள் வெறுத்தனர்.
“வைகோவைக் கேட்கிறோம் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்; திருமாவளவனைக் கேட்கிறோம் கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள்; ராமதாஸைக் கேட்கிறோம் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்” எனக் கோபத்துடன் முழங்கினர்.
மாணவர்கள், தெளிவான முடிவுடன் திட்டமிட்டு இதைச் செய்தனர். ஒரு நாள் பயணத்தில் மட்டுமேயல்ல: முந்திய நாட்களில் தமக்குக் கிடைத்த அனுபவங்கள், நிகழ்த்திய உரையாடல்களின் முடிவில் இந்த