பொம்மைகள் வசிக்கும் உலகம்
பள்ளிகளுக்கு விளம்பரப் பருவம் இது. செய்தித்தாள்களின் பக்கங்கள் தனியார் பள்ளி
விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. சில நாள்கள் சிறப்புப் பகுதி வெளியிட்டு
விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு நேர்கின்றன. பெரும்பாலான
விளம்பர வாசகங்கள் பொய் சொல்பவை. சாதாரணப் பொய், பெரும்பொய், மாபெரும்பொய்
என்று அதிலும் பல வகைகள் உண்டு. விளம்பர வாசகங்கள் மனிதர்களை நுகர்வோராக மாற்றி
அவர்களை மந்தைகளாகக் கருதி அவர்களின் மனோபாவங்களைக் குறிவைத்து வடிவமைக்கப்படுபவை.
நுகர்வோர் மந்தையும் எதையும் தர்க்கரீதியாக யோசிப்பதில்லை. பள்ளிகளின்
விளம்பரங்களில் இத்தகைய வாசகங்கள் பல உண்டு.
எல்லாப் பள்ளிகளின் விளம்பரங்களிலும் ‘ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு’ என்னும் வாசகம் கட்டாயம் இடம்பெறுகிறது. இது அந்தப் பள்ளியின் தனித்தன