வருகை
அடிகுழாயின் கைப்பிடிமேல் அமர்ந்து அரைக் கண்ணை மட்டும் மூடி நின்று ஒண்ணு, ரெண்டு,
நாலு, ஏழு என இளங்கோ எண்ணிக் கொண்டிருந்தபோதே, எளிதில் அகப்பட்டுவிடாத இருளான
இடங்களை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தோம். எட்டு மணிக்கு மேல் அதில் தண்ணீர்
வராது. அவனை “ஐஸ்” அடிப்பதற்கு வாகான இடத்தில் ஒளிந்த சமயத்தில் தூரத்தில் அப்பா
பீடி எறிவதைப் போலவே ஒருவர் எறிவதைப் பார்த்தேன். பகீரென்றது.
அது அவரல்ல என உணர்ந்து சமனப்பட்டபோது நடுத் தெருவிற்கு அம்மா வந்து நின்று ஓங்கிய குரலில்,“சேகரூ... ரூ... டேய்... கல்லெண்ணய வாங்கீட்டு விசுக்குன்று ஒடியா... வூட்ல வேல நெறயக் கிடக்கு” என்றாள்.
தண்ணீரில்லாத தொட்டியிலிருந்து மெல்லக் கண்களை மட்டும் உயர்த்தியதில் அம்மாவின் பின்னால் முந்தானையை ஆட்டியவாறே விஜி நிற்பது தெரிந்தது. பதுங்கிய இடங்களை இளங்