மனித வாழ்வு இருப்பின் ஸ்திரமற்ற தன்மைகளோடு துயருற்றுக்கொண்டிருக்கையில் அரசும்
நாடும் செய்துவிட ஏதும் இருக்கக்கூடும் என்னும் நம்பிக்கை தொலைந்து வெகுகாலம்
ஆனபோதும் எஞ்சிக்கிடக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை, ஆயிரக்கணக்கில் இறந்தும்
சிதைந்ததும் உறவுகள் தொலைத்தும் உதிரத்தோடு நிச்சயிக்கப்பட்டுவிட்ட
வாழ்க்கையிலிருந்து விடுபடச் செய்யும் சொற்கள் பிறக்கும் கணத்தை எதிர்நோக்கிக்
கையேந்தச் செய்திருக்கிறது ஈழத் தமிழ்ச் சமூகத்தை. சமூக விழுமியங்களும் தார்மீக
அறங்களும் பொருளற்றுப்போன இத்தருணத்தில் ஒரு தனிமனிதனின் இருத்தல் இழப்புகளன்றி
வாய்க்கக் கூடுமெனில் அது அவனது நற்பேறே அன்றி இச்சமூக நல்அடையாளத்தின்
வெளிப்பாடல்ல.
மாபெரும் மனிதச் சங்கிலி, உண்ணாவிரதங்கள், வேலை நிறுத்தங்கள், மாணவர் போராட்டங்கள் என ஈழப் போருக்கான எதிர்ப்பு பல தரப்பிலிருந்த