எண்பது நிறையும் எம்.எஸ்.
எம்.எஸ்.சார் என இலக்கிய அன்பர்களால் மரியாதையுடனும் நட்புணர்வுடனும் அழைக்கப்படும்
எம். சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு எண்பது வயதாகிறது. வயதுதான் எண்பதே தவிர,
இப்போதும் ஓர் இளைஞனைப் போலச் சுறுசுறுப்புடன் செயலாற்றும் அதிசய மனிதர் அவர்.
உரத்துப் பேச அறியாதவர். எல்லோருடனும் நட்புணர்வோடு பழகக்கூடியவர். மாற்றுக்
கருத்துகளையும் புன்முறுவலுடன் மென்மையான குரலில் வெளிப்படுத்துகிறவர்.
வனமாலிகையின் சதங்கை இதழின் தொடக்க காலத்திலிருந்தே அதற்குச் சகலவிதங்களிலும் பங்களிப்புச் செய்தவர். சுந்தர ராமசாமியுடனான எம்.எஸ்.ஸின் நட்பு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நெருடலும் இல்லாமல் தொடர்ந்தது. சுந்தர ராமசாமியின் படைப்புகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே படித்து, தேவையான ஆலோசனைகள் வழங்கியவர். தனது நூல்களின் முன்னுரைகளில் இதை நன்றியுடன் சுந்தர ராமசாமி நினைவுகூர்ந்துள