சி. மணி அறிமுகப்படுத்திய நாடகவெளி
‘நாடகவெளி’ என்பதை வெளி. ரங்கராஜன் பிரபலப்படுத்தியிருக்கிறார். நாடகவெளியைப் பற்றி
மட்டுமல்ல வெளி, இடம் என்பதற்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் குணம் இருப்பதை
எனக்கு அறிமுகப்படுத்தியவர் சி. மணி. இவ்விதமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக
அவர் அறிமுகப்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. சில மனிதர்களையும் சில
புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியபோதும் இது நேர்ந்தது. நடிப்பிடத்தை நான் நன்றாகப்
புரிந்துகொண்டேன். நடிகனை உத்வேகப்படுத்தும் குணம் அதற்கு இருப்பது எனக்குத் தெரிய
வந்தது. அப்புறம் பலவாறாக இதை நான் விரிவுபடுத்திக்கொண்டேன்.
இடத்திலும் காலத்திலும் அறிவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும் அது பக்குவமானவர்களை அடைந்து அறிவுறுத்திவிட்டு மீண்டும் பயணப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறதென்றும் குருஜீஃப் சொன்னது எப்போதும் என் நினைவில் இருந்துகொண்ட