இருளர்களின் திருவிழா
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குலதெய்வத்தை கன்னியம்மா பூசை மூலம் வணங்குகிறார்கள்.
காடும் காடு சார்ந்த இடங்களையும் வாழ்விடமாகக் கொண்ட இருளர், கடலுக்குள் இருக்கும் கன்னியம்மனை வணங்குவது அவர்களைப் பற்றிச் சொல்லும் கதையின்படி தங்கள் முன்னோர் மாமல்லபுரப் பகுதியில் சந்தித்த கடற்கோளின் பாதிப்பாகவும் இருக்கலாம். கன்னியம்மாவை ஆயம்மா என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆழி என்பதுகூட ஆயி எனத் திரிந்து ஆயம்மாவாக ஆகியிருக்கலாம். கன்னியம்மாவின் தங்கைகள் எனக் கூறும் தெய்வங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் மாரி, செல்லி, நீலி என்னும் தெய்வங்களாக இருப்பது இருளர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒரு இறுக்கமான முடிச்சையும் உருவாக்குகிறது. பெரும்பாலான கிராமத்துத் தெய்வங்கள் அந்தச் சமூகத்தில் அகால மரணமடைந்த அல்லது அவர்களைக் காக்க உறு துணையாகயிருந்த உயிர் நீத்த மனிதர்களாக இருப்பதுபோலவே கன்னியம்மனும் இருளர் மத்தியில் வாழ்ந்த ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும