மயக்கங்களிலிருந்து விடுபட்ட சங்கீதம்
ஒரு கலைஞனின் நேர்காணலும் சில ரசிகர்களும்
காலச்சுவடு 80ஆம் இதழில் (ஆகஸ்ட் 2006) கர்நாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. பிரசன்னா ராமசாமி, யுவன் சந்திர சேகர், வி. ரமணி, வி. கே. ஸ்ரீராம் ஆகியோர் நேர்காணலை நடத்தியிருந்தனர். கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் சம்பிரதாய மயக்கங்களிலிருந்து விடுபட்ட வெளிப்படையான குரலில் நடத்திய கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது. அதற்குக் காலச்சுவடு வாசகர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது எனத் தெரியவில்லை. அப்போது நான் திருவனந்தபுரம்வாசி. ஆனால் மலையாள இலக்கிய நண்பர்களிடையே சஞ்சயின் நேர்காணல் வியப்பை ஏற்படுத்தியது. இசை ஆர்வமுள்ள நண்பர்களிடம் நேர்காணலை வாசித்துக் கேட்கச் செய்தேன்.
சிறுகதையாளரான உண்ணி ஆர், கவிஞரும் தீவிர இசை ரசிகருமான பி. ரவிகுமார் இருவரும் நேர்காணலின் மூல