நாட்டுடமையாக்கம் எனும் சொட்டு மருந்து
பல விஷயங்களில் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலும் மனத்தின் ஏதோ ஒரு
மூலையில் சிறிய உறுத்தல் ஒன்று - செருப்பிற்குள் மாட்டிக்கொள்ளும் மண்துகள்போல -
இருந்துகொண்டிருக்கும். சு.ரா. நாட்டுடமையாக்கத்தை மறுத்த பின்னர், சில நல்லெண்ணம்
கொண்ட நண்பர்கள் அரச கௌரவத்தை மறுக்க வேண்டுமா என வினவியபோது, மனத்தில்
ஏற்பட்டிருந்த தெளிவில் சில சலனங்கள். அப்போதுதான் அ. மார்க்ஸ் அரசுக்கு ஆதரவாகக்
(ஜூ.வி., பிப். 25, 2009) கருத்து கூறியிருக்கும் செய்தி கிடைத்தது. உறுத்தல்
மறைந்தது.
அ. மார்க்ஸ் ஆதரிக்கிறார் என்றால் நடைபெற்றது காலச்சுவடுக்கு எதிரான ஒரு சதிமுயற்சி என்பதில் சந்தேகமே இல்லை - பெரும்பான்மையான சதி முயற்சிகளைப் போல இதுவும் சதியை உருட்டியவர்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்ற போதிலும்.
ஜூ.வியில் அ. மார்க்சிடம் கருத்துக் கேட்டிருந்த பரக்கத் அலி, சம்பந்தப்பட்ட காப்புரிமையாளர்கள், பதிப்பாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை. இருபக்கக் கருத்தை அறியும் அடிப்படையான இதழியல்நெறி பேணப்படவில்லை. அ. மார்க்சை நெருங்கும் போதே இது போன்ற சகிப்பின்மை வந்து ஒட்டிக்கொண்டுவி