வரலாறாகும் ஆவணங்கள்
சங்க இலக்கியம், தமிழர் வரலாறு, பண்பாடு, அரசியல் எனப் பல துறைகளை உள்ளடக்கியது தமிழியல் ஆய்வு. சமஸ்கிருதம் கற்ற சர். வில்லியம் ஜோன்ஸ் அதன் சிறப்புகளை உலகுக்குக் காட்டத் தொடங்கிய வேளையில் இண்டாலஜி, ஓரியண்டலிஸம் என இந்தியா குறித்த விழிப்புணர்வு அறிஞர்கள் மத்தியில் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக 19ஆம் நூற்றாண்டில் கால்டுவெல் போன்ற வெளிநாட்டவர்கள் தமிழ் குறித்த முறையான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் பிறகு தமிழியல் ஆய்வு தனித்துறையாக ஆய்வாளர்களின் அங்கீகாரம் பெற்று இன்று புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழியல் ஆய்வுக்குத் தேவைப்படும் தமிழ், ஆங்கில நூல்களைச் சேகரித்து ஆய்வுக்கு உதவும் பணியை நோக்கமாகக் கொண்டது ரோஜா முத்தையா நூலகம் எனத் தன் உரையைத் தொடங்கினார் அதன் இயக்குநர் சுந்தர்.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றைக் கூறும் நூல்கள