தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத் தலைவர் டி. பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு மின்காணல்
தமிழ்நாட்டில் உள்ள மின் பற்றாக்குறைக்குக் காரணங்கள் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள மின் பற்றாக்குறைக்கும், மின் தடைகளுக்கும் காரணம் வெளிப்படையான போதுமான அளவு மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தால்* அளிக்க இயலாததுதான். இதன் காரணங்கள்:
1. போதுமான மின்சாரத்தை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய அவசியமான திறன் நிறுவப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் மின் உற்பத்தித் திறன் 11.5%தான் கூடியுள்ளது.
2. பற்றாக்குறையான மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கத் தேவையான மின் தொடரமைப்புக்களின் திறன் (Capacity of Transmission Lines) இல்லை. அப்படி தொடரமைப்புக்களின் திறன் இருந்திருந்தாலும் அவ்வாறு மின்சாரத்தை வாங்க முயற்சிகள், வாங்குவதற்கான நிதி வசதிகள் செய்யப்படவில்லை.
<p class="questi