எழுதப்படாத வலிகள்
தமிழீழப் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டு கடும் சமரில் பட்டியல் இடப்படாத இழப்பீடுகளுக்குள் அடங்காத அழிவுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆளாகிவரும் சமூகத்தின், பெண்களின் நிலைகுறித்த, முக்கியமாக விளிம்பு நிலை பெண்கள் பற்றிய, விவாதத்திற்கோ அல்லது அதற்கு அப்பாலும் கூட செல்லும் எந்தவொரு முயற்சியும் சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றுக்கொள்வதாயில்லை. ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் உள் ஒடுங்கிய அல்லது உள் ஒடுக்கப்படும் பெண்களின் மெலிந்த குரலானது மேலெழும்பியதாய் இருக்கவில்லை.
நிலத்தை ஆக்கிரமித்து நிற்கும் சகோதர இனத்திற்கு எதிராகவும் அதேவேளை, சக இன ஆதிக்கத்திற்கும், பொது