சினுவா அச்செபெ: முன்னோடிக் கதை சொல்லி
“கதை சொல்லிகள் ஒரு அச்சுறுத்தல். அவர்கள் கட்டுப்பாட்டின் காவலர்களை அச்சுறுத்துகிறார்கள். அரசாங்கத்திலும் தேவாலயம் அல்லது மசூதியிலும் கட்சிப் பேராயங்களிலும் பல்கலைக்கழகத்திலும் அல்லது வேறு எந்த இடத்திலும் மனித ஆன்மாவின் சுதந்திரத்துக்கான உரிமையை அடாத வழியில் கைப் பற்றியிருப்பவர்களை அவர்கள் அச்சுறுத்துகிறார்கள்.”
சினுவா அச்செபெ
Anthills of the Savannah
2013 மார்ச் மாதம் 21ஆம் தேதி. இலக்கியத் திரு உருவின் மறைவுச் செய்தி வைரஸ் வேகத்தில் பரவியது. ‘நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை’ என்று அறியப்பட்டிருந்த பேராசிரியர் சினுவா அச்செபே அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் நகரத்து மருத்துவ மனையொன்றில் மரணமடைந்தார்.
1930 நவம்பர் 16ஆம் தேதி நைஜீரியாவில் ஆல்பெர்ட் சினுவாலுமோகோ அச்செபே ஆகப் பிறந்த (தனது ஆப்பிரிக்க உணர்வின் உச்சகட்டத்தில் தன் ஆங்கிலப் பெயரை விட்டுவிட்டார்.) அந்த மகத்தான கதை சொல்லி சாகசமும் மிக மேன்மையான ஈடுபாடும் கொண்ட வழியில் இலக்கியத்தைக் கலக்கினார். மொத்த உலகமும் அதைக் கூர்ந்து கவனித்த