சீற்றம் பொதிந்த பதிப்பு
புதுதில்லியில் மரண தண்டனையை எதிர்பார்த்து 11 ஆண்டுகள் சிறையிலிருந்த - அதிலும் தனிமைச் சிறையிலிருந்த - முகமது அப்சல் குரு, 2013 பிப்ரவரி 9ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். அது கள்ளத்தனமாக நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை. முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் (உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்) ஒருவர் கூறுவது போன்று, அதன் சட்டத் தன்மை குறித்து அழுத்தமான கேள்விகள் எழுகின்றன.
இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் மூன்று ஆயுள் தண்டனைகளும் இரண்டு மரண தண்டனைகளும் வழங்கிய ஒருவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் தூக்கிலிட்டதில் உள்ள சட்டத் தன்மையைக் குறித்து எப்படி சந்தேகங்கள் ஏற்படுகின்றன? வழக்கத்திற்கு மாறாக நீண்டகாலம் சிறையிலிருந்த கைதிகளுக்கு மரண தண்டனை அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அதன் விசாரணைகளை 10 மாதங்களுக்கு முன