40வது இலண்டன் இலக்கியச் சந்திப்பில் தலித்தியம், பெண்ணியம்
இலண்டனில் 2013 ஏப்ரல் 6, 7 தேதிகளில் நடந்த 40ஆவது இலக்கியச் சந்திப்பில், ஆணாதிக்க நோக்கில் கருத்துச் சொன்னதாக என் மீது குற்றம் சுமத்தி பானுபாரதி ஒரு வீடியோ தொகுப்பில் தோன்றி என்னைக் கண்டித்திருக்கிறார். அதனையடுத்து தமிழ்ச்சூழலில் இருந்து 29 பெண் ஆளுமைகள் என் மீதான கண்டனத்தை வெளிப்படுத்தி “பானுபாரதியின் சுயத்தை நான் இழிவுபடுத்திவிட்டதாகவும்”, “பெண்களின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இப்படியான பொறுப்பற்ற கருத்துக்களை வைப்பதை ஆணாதிக்கவாதிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பானுபாரதி உட்பட இந்த அறிக்கையில் கையொப்ப மிட்டவர்கள் அனைவரும், அரங்கில் நான் என்ன கூறினேன் என்பதை நேரடியாகக் கேட்டவர்கள் அல்ல. நான் கூறிய கருத்தினைத் திரித்து அதற்குப் பெண்ணிய நோக்கில் அர்த்தம் கற்பித்து பால் சமத்துவ அரசியலை முன்னிறுத்தி என்னை ஆணாதிக்கவாதியாகக் காட்டி, தாம் கொண்டுள்ள அரசியலின் அசல் முகத்தை மூடி மறைத்து, பொதுத்தளத்தில் ஆட்களைச் சேர்க்கும் மலிவான உத்தி இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களால