காற்றின் பிரகாசம்
1990களின் நடுப்பகுதியில் என் கவிதை முயற்சிகளைத் திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும் எனக்கிருந்த சவால்களோடும் இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக் கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை நான் வளர்த் தெடுக்கும் கனவுகளோடு, கவிதை யுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும் காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போது வெடித்துக்கொண்டிருந்தன.
திணறிக்கொண்டிருந்த அன்றைய காலச் சூழலுக்கு மூன்றாவது மனிதன் சஞ்சிகையும் மிக அரிதாகவே கிடைத்த சரிநிகர் பத்திரிகையும் அமைதி சேர்த்தன. அவற்றில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள், எதிர்வினைகள், அவற்றை எழுதியவர்களுடைய நான் கண்டும் கேள்விப்பட்டுமிராத பெயர்களும் விடயங்களும் அதிசய உலகத்தைக் காண்பித்தன. கனவிலும் அந்தப் பெயர்கள் ஒவ்வொரு உருவம் எடுத்துவந்து என்னை அவ்வுலகிற்கு அழைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் 2001ஆம் ஆண்டு கணவர் அஸீமுடன் சவூதி அரேபியாவில் வசிப்பதற்காக ஆ