மகாவம்சம் பீடித்த மாந்தர்
“ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.”
அமார்த்தியா சென்
(The Argumentative Indian)
இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்பாலான சிங்கள - பௌத்த மக்கள் அதை ஒரு வரலாற்று நூலாகவும், புனிதப் பாடமாகவும் போற்றி வருகிறார்கள். அந்தச் சிங்க -இளவரசி தம்பதிகளின் பேரனையே சிங்கள இனத்தின் மூலகர்த்தாவாக மகாவம்சம் ஏற்றிப்போற்றுகிறது. “அவன் (விஜயன்) தீய நடத்தை கொண்டவன்” என்று மகாவம்சமே கூறுகிறது. “அவனும் அவனுடைய தோழர்களும் பயங்கரக் குற்றங்கள் பலவும்