சகபயணி
வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது.
“ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்படிப் போவது? அப்பாவின் நரைத்த தாடி மயிர்களுக்குள்ளால் அடிக்கடி கண்ணீர் ஒழுகுகிறது. அம்மா ப