எஸ்.வி. சகஸ்ரநாமம் நூற்றாண்டு மேடையில் மலர்ந்த இலக்கியக் கனவு
நாடக நிகழ்வென்பது கூட்டு உழைப்பாலும் ஒத்திசையும் கூட்டு உடல் மொழியாலும் நிகழ்த்தப்படுவது. ஒலி ஒளி வண்ணங்கள், ஒப்பனைப் பிரதி என பல்கலையின் கூட்டு உச்சரிப்பு அது. அந்தக் கூட்டு உச்சரிப்பின் தனித்துவம் வாய்ந்த குரல்களில் ஒன்று தமிழ் நாடகக்கலையின் தலைமை ஆசான் என்று இன்றும் எல்லோராலும் போற்றப்படும் தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்.
பொழுதுபோக்கோடு, புராணம், இலக்கியம், வரலாறு, சமயம், கற்பனை, மொழிபெயர்ப்பு என எழுதி, நடித்து, நிகழ்த்திக்காட்டி தமிழின் தொன்மங்களை பாமரனுக்கும் நாடக வழியில் கொண்டு சேர்த்தவர் சுவாமிகள். இரணியன், இராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற பல கதாபாத்திரங்களில் அவரது அசாத்திய நடிப்புத் திறன் வெளிப்பட்டுள்ளது.
ஒப்பனையைக் கலைக்காமல், சனீஸ்வரன் வேஷத்தில் விடியற்காலை குளக்கரைக்கு வந்த சங்கரதாஸ் சுவாமிகளின் தோற்ற