பீதியின் புகை நிழல்
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. ஊடக கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் போராட்டத்தின் இலக்காகி இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட நச்சுப் புகை பொதுமக்களின் உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்திய பாதிப்பால் வெகுண்ட மக்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்தாயிரத்துக்கும் அதிக மானவர்கள் கலந்துகொண்ட போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடி விளைவாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கும் முன்பே ஆலை மூடலுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத்தான் விசித்திரமானதாகவும் கண்டனத்துக்குரியதாகவும் அமைந்திருக்கிறது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தியமைக்காக ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட நிர்வாகத்துக்கு நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தொகையைச் செலுத்திவிட்டு ஆலையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே தீர்ப்பு. (ஆலையை மூடுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 30ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை