கர்நாடகம்: புதிய அரசு சோதனையில் வெல்லுமா?
இந்தக் கட்டுரை அச்சுக்குச் செல்லும்போது கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். மாநில அரசுகளைப் பொறுத்து அண்மைக் கடந்த காலங்களில் கர்நாடகம் மிகுந்த நாடகீயமான மாநிலமாகவே இருந்து வருகிறது. வாக்கு எண்ணப்படும் தேதியான மே 12க்கு முன்னர் ஐந்து ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்தி செய்த முதல்வராக சித்தராமய்யாவைப் பெற்றிருந்தது. சித்தராமய்யாவின் தந்திரோபாயங்கள் தோல்வியடைய தேர்தல் முடிவு பலத்த அடியைக் கொடுத்ததுடன் காங்கிரஸ் சத்தமில்லாமல் வீழ்ச்சியடைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 சீட்டுகளுடனும் காங்கிரஸ் 78 சீட்டுகளுமாக அரசு அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தும் 104 இடங்கள் பெற்றிருந்த பாஜகவுக்கே ஆளுநர் முதல் வாய்ப்பு அளிக்கக் கருதினார். இது போன்ற சூழ்நிலையை எதிர்பார்த்து ஏற்கெனவே பங்களூருவில் இருந்த பிரதிநிதிகளுடன் விவாதங்களும் நடைபெற்றன. எச்.டி. குமாரசாமியை முதல்வராக முன்மொழியக் காங்கிரஸும் நிபந்தனையற்று ஒப்புக்கொண்டது.