பழைய பேப்பர்
பத்திரிகைகள் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவேடு என்று கருதிவிடக்கூடாது. கருத்துச் சுதந்திரத்தின் அடிநாதமாக விளங்கும் பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி. நிகழ்வுகளையும் அதுதொடர்பான தகவல்களையும் சொல்வதன் மூலம் மக்களிடையே கருத்துகளை உருவாக்குவதற்கும் அதன் மூலம் சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அது பயன்பட்டு வரும் ஒரு சாதனம். அன்றாடப் பயன்பாட்டுக்குப் பிறகு, பத்திரிகைகள் பழைய பேப்பர் ஆகி விடுவது நிஜம்தான். ஆனால், அவை ஏற்படுத்திச் சென்ற தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது.
காலத்தை வென்று நிற்கும் எழுத்துகளை உருவாக்குவது ஒரு போதும் பத்திரிகையாளனின் நோக்கமாக இருக்க முடியாது. வாழ்கின்ற காலத்தின் நிலைமையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதும் அதைப் புரிந்துகொள்ள எழுதுவது மட்டுமே தினசரி வாராந்திர இதழ்களில் சாத்தியம். புத்தகங்களைப் போல, பத்திரிகைகளை, குறிப்பாக நாளிதழ்களைச் சேர்த்துவைத்துக்கொள்வது நடைமுறை