லண்டனில் கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸின் லண்டன் தொடர்பும் அவர் அங்கு வாழ்ந்த காலத்திலும் மறைந்த சில ஆண்டுகளிலும் நிலவிவந்த சோசலிச கருத்துகள், சூழல்கள் பற்றிய குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
1847 ஜூலை - ஆகஸ்டில் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. சார்ட்டிஸ்ட் இயக்கம் வேட்பாளர்களை நிறுத்தியது. மரில்போன் என்கிற இடத்தில் அரசியல் சீர்திருத்தம் என்கிற முழக்கத்துடன் ராபர்ட் ஓவன் வேட்பாளராக நின்றார்; வெற்றிபெறமுடியவில்லை. 1844 செப்டம்பரில் ஜெர்மன், போலந்து, இத்தாலியிலிருந்து குடியேறிய அகதிகள் தங்களை இங்கிலாந்து சமூகத்தினருடன் இணைத்துக்கொண்டு லண்டனில் சகோதரத்துவ ஜனநாயகச் சமூகம் என்பதைத் தொடங்கினர். தங்கள் கூட்டங்களை ஜெர்மன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கிளப்பில் (கட்சிகளுக்கு அப்போது கிளப் எனப் பெயரிட்டனர்) நடத்திவந்தனர். அவர்கள் சார்ட்டிஸ்ட் இயக்கத்தார்களையும் இக்கூட்டங்களுக்கு வருமாறு அழைத்தனர்.
மாஜினிக்கு நேரடியாக சார்