ஸ்டெர்லைட் போராட்டத்தின் வரலாறு
‘கல்வித் தரகர்கள்’ தலையங்கம் வாசித்தபோது மனம் வலித்தது. தக்க தருணத்தில் முறையாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை. உயர் கல்வித் துறையில் காணப்படும் மோசடிகளை அன்றாடம் நடக்கும் அற்ப சொற்ப ஊழல் எனக் கருதி மௌனமாகக் கடந்துபோக இயலவில்லை. கட்டணமில்லாக் கல்வியே அரசின் அறைகூவலாகக் காட்சிப்படுத்தப்பட்டுவரும் வேளையில், “காசின்றிக் கல்வி இல்லை” என்ற எதார்த்தம் சுடுகிறது; பிடரியில் ஓங்கி அறைகிறது.
அறிவிற்கும் அறத்திற்கும் வழிகாட்ட வேண்டிய கல்விக் கூடங்கள், கலவிக் கூடங்களாக மாறிவிடுமோ என்ற அச்சம் முள்ளாய்க் குத்துகிறது. அடியிலிருந்து உச்சிவரை பணம் பண்ணும் தொழிற் கூடங்களாகவும் அவை மாறிப்போன நிஜம், நிஜமாகவே நோகடிக்கிறது. இதையெல்லாம் நோக்குகையில், கல்வித் திட்டத்தில் எங்கோ கோளாறு இருப்பது உறுதியாகிறது.
“Teacher is Second Mother” என நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்; ஆசிரியர்கள் அன்னையராகவே விளங்கவும் செய்தார்கள்; மாணவர்களின் கல்வி அறிவில் மட்டுமன்றி, அவர்களின் ஆரோக்கியம், குடும்ப நலன், அறநெறி ஆகியவற்றிலும் தாயைப் போன்றே அக்கறை செலுத்தினார்கள். பணம் அவர்க