புதைகுழி
கல்லறை மறுக்கப்பட்ட எங்கள் அனைத்து நண்பர்களுக்குமான ஒரு கல்லறை வாசகம். குறிப்பாக, ஒரு பாரிய பிரேதக்குழிக்குள் வீசப்பட்ட எனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கானது.
எனது ஒன்றுவிட்ட சகோதரனின் உடலை அவர்கள் ஒரு பாரிய புதைகுழியில் கண்டெடுத்தார்கள்.
இந்தச் சிறைச்சாலையிலிருந்து தனியே எங்களுடைய கனரக வண்டி மட்டும் திருப்பி அனுப்பப்படவில்லை. ஏற்கெனவே சிறைச்சாலை நிரம்பி வழிந்தது. உண்மையில், மெதுவாகப் பக்கம் பக்கமாக ஊர்ந்துகொண்டிருந்த, மனிதர்களால் நிரம்பி வழிந்த பெரும்பாலான கனரக வண்டிகள் சிறைச்சாலையினால் நிராகரிக்கப்பட்டன. சிறைக்காவலன் மரியாதையாக ஒவ்வொரு வண்டி ஓட்டுநரிடமும், “என்னால் முடியுமாயிருந்திருந்தால் உங்கள் சுமைகளுக்கு நான் இடம் ஒதுக்கித் தந்திருப்பேன்,” என்றான். வண்டி சிறைக்காவலனுக்குக் கீழ்ப்படிந்து ராட்வானியா சிறைச்சாலையை நோக்கி நகர்ந்தது. ‘ராட்வானியா’ என்கிற சொல்லின் அர்த