சமாதானத்தின் கதை
எண்ணூற்று ஐம்பத்தாறாம் இலக்கப் பேருந்தில் பயணித்து, ஆலடிச் சந்தித் தரிப்பிடத்தில் இறங்கும் பலரும் அங்கிருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கேட்கும் கேள்வி இது,
“சமாதானத்திட்ட எப்பிடிப் போறது?”
கடைக்காரரும் வெளியே வந்து கைகளால் சுட்டிப் பாதையை விவரிப்பார்.
“இப்பிடியே இந்த நரிக்குண்டு ரோட்டால ஒரு கட்டை நடந்தீங்கள் எண்டால் கிழக்கால வயக்காச்சி அம்மன் கோயில் வரும். அதிண்ட தேர் முட்டிப்பக்கம் ஒரு சின்னக் கொட்டில் இருக்கு. அங்கனதான் சமாதானம் கிடக்கும்”
இதனையே மதியத்துக்கு மேலே, இரண்டு மணிப் பேருந்தில் வந்து இறங்கியவர் விசாரித்திருந்தால் பதில் சற்று வேறாக இருந்திருக்கும்.
“இந்தா, இந்த நரிக்குண்டு ரோட்டால அரைக்கட்டை உள்ளுக்க இறங்குங்கோ. வலதுபக்கம் ஒரு மலைவேம்பு நிக்கும். அதுக்குப்பக்கமா, பச்சைக்கலர் கேற்றுப் போட்ட வீட்டிலதான் இந்த நேரம் சமாதானம் இருக்கும். பரிமளக்காண்ட வீடு எண்டு கேட்டா ஆரும் காட்டுவினம்.”
நரிக்குண்டுக்குச் சமாதானத்தைத் தேடிச் செல்பவர்கள் அந்தப் புறநகர் கிராமத்தின் சுதந்திரத்துக்குப்