மீசை எனும் மயிர்
சரைக்க போக வேண்டியதுதானல’
‘ஒரு மயிரும் புடுங்க முடியாது’
‘நீ வழிச்சது போதும்’
‘இவன் பெரிய மயிராண்டி’
‘மயிரப் புடுங்கின கதை’
‘அந்த மயிரெல்லாம் எனக்குத் தெரியும்”
எனக் காலங்காலமாக மயிரை மன்னிக்க முடியாத குற்றத்திற்குள் தள்ளியிருக்கிறோம். ‘மயிர்’ கெட்ட வார்த்தையாக அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காலத்தின் சூழ்ச்சியே காரணம் என்பதை விட சமயத்தின் காழ்ப்புணர்ச்சியே முதன்மையாக அமைகிறது. உலக நாடுகள் கூட மயிரை ஒதுக்குப்புறமாகவே வைத்துப் பார்க்கின்றன. இதன் வரலாறும் வலிகளும் அரங்கேற்றப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன. எல்லாத் தரப்பான கேள்விகள் எழுந்தாலும் விடை அனைத்திற்கும் வக்கிரப் புத்தி கொண்ட சமூகத்திற்கே இது சாரும்.
மீசை என்பது வெறும் மயிரல்ல. அது வரலாற்று உட்கூறுகளுக்குள் எழுதப்படாத கலகங்களாக