அருணி கஷ்யப் கவிதை
அஸ்ஸாமிய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதும் அருணி கஷ்யப் எனக்கு மிகவும் பிடித்த இளம் எழுத்தாளர். வைகிங்/பென்குவின் 2013இல் வெளியிட்ட The House With A Thousand Stories என்ற நாவல் 1990களின் இறுதியில் அஸ்ஸாமில் ஆயுத போராட்டத்தைத் தடுக்க, சட்டத்தை மீறிச் செய்த கொலைகளின் பின்னணியில் எழுதப்பட்டதாகும். அஸ்ஸாமிய மொழியிலிருந்து சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமியின் The Bronze Sword of Thengphakri Tehsildhar நாவலை ஸுபான் பதிப்பகம் மூலம் ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தற்போது அஸ்ஸாமிய மொழிச் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். அசோகா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தற்சமயம் அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
அம்மா கொண்டுவரும் மழை
<