அதிகாரமற்ற நிலையை நோக்கி பல்கலைக்கழக மானியக்குழு

பல்கலைக்கழக மானியக் குழுவை இல்லாமலாக்க இந்த அரசாங்கம் திட்டமிட்டு வேலை செய்கிறது.
அறுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் உயர் கல்வி அமைப்பிற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (பமாகு) பணியாற்றியிருக்கிறது. தன்னையொத்த நிறுவனங்களைப் போலவே இதுவும் தனது பல்வேறு பொறுப்புகளை ஆற்றுவதில் தடுமாறிக்கொண்டிருந்தது. அதன் மூலாதாரங்கள் கணிசமான அளவிற்கு வற்றிப்போனதுடன் ஒட்டுமொத்த அமைப்பின் சூழல்கள் மாறிப்போனதும் இதற்குக் காரணம். பமாகு’வின் செயல்திறனில் பெரும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகத்தான் இது உருவாவதற்கும் நிதி அதிகாரம் பெறுவதற்கும் வழிவகுத்த சட்டத்தை மத்திய அரசாங்கம் நீக்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பமாகு’விற்கு மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள நிறுவனம் குறித்த தொலைநோக்குப் பார்வையால் இது செய்யப்படுவதாகவும் தெரியவில்லை.
உயர் கல்வி ஆணையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாற்று நிறுவனம் பமாகு அதிகாரத