கிறுக்கி

அன்பிற்குரிய இஹ்சானுக்கு,
இறைவன் ஆணா?
இந்தக் கேள்வி ‘இறைமறுப்பு’ என்றால் அதற்காக நான் பாவமன்னிப்பு கோருகிறேன். நான் இறைவனை நேசிப்பவள். அவனே என் பாதுகாவலன். அவனை மட்டுமே நம்பியிருக்கிறேன்...
என்றாலும், இறைவன் ஆணா என்ற கேள்வியை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை...
தொலைவிலிருந்து இந்தக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்...
எங்கள் நாடு வறண்ட பாலைவனம்... இங்கே மணல்தான் தங்கம். மக்களின் நம்பிக்கை, ஒழுக்கம், அறிவாற்றல் இவைதாம் எங்கள் நாட்டின் சொத்து. பெண்கள் எங்கள் நாட்டு மலர்கள். சந்திரன், நட்சத்திரங்கள் மட்டுமே எங்கள் நாட்டுக்கு வழிகாட்டும். இங்கே படர்ந்துள்ள இருளை அன்பின் முணுமுணுப்புகளால் மட்டுமே அகற்ற முடியும்.
திடீரென இறைவன் எங்கள் நாட்டிற்குப் புதிய வளத்தை வாரி வழங்கினான்.
கறுப்புத் தங்கம்... அதன் பெயர் பெட்ரோல்!
ஆண்களுக்கு மட்டுமே இறை