சாகர்மாலா: வரமா? சாபமா?

முன்னாள் பிரதமர் வாஜ்பேயியால் தேவை கருதித் தகுதியான தருணத்தில் உணரப்பட்டு, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்படும் கப்பல் - துறைமுகம் சார்ந்த மாபெரும் திட்டம் சாகர்மாலா. பல லட்சம் கோடிச் செலவில், பாரத மாதாவின் கடல் மாலையாக அது உருவாவதாகச் சொல்லப்படுகிறது. துறைமுகங்கள் நாட்டின் முகங்கள்; அவை தேவையான இடத்தில் அமைந்து, பிராந்தியச் சரக்கு உருவாக்குத் தளங்களோடு இணைக்கப்பட்டு, தொலைநோக்குப் பார்வையோடு நிர்வகிக்கப் படவேண்டுமென்ற தெளிவு ஆட்சியாளர்களுக்கு இப்போதாவது ஏற்பட்டிருக்கிறதே என்ற வகையில் இந்த முன்னெடுப்பைப் பாராட்டலாம். இந்த முனைப்பும் அவசரமும் உண்மையிலேயே இத்திட்டம் நாட்டின் தேவை கருதி அக்கறையோடு அமைகிறதா அல்லது வழக்கம் போலவே அடிப்படைப் புவிசார் சிந்தனையோ, தொலைநோக்குத் தெளிவோ இல்லாமல் அரசியல் நலன் சார்ந்து திணிக்கப்படுகிறதா என்ற ஐயம் கடல்வழி வாணிபத்தில், கப்பல் உரிமையாளர்களாயும் ஏற்றுமதி - இறக்