அடையாளம் தொலைத்தவர்கள்

மனித வாழ்க்கையின் சுதந்திர எல்லைகளைச் சமூகக் கலாச்சாரக் கட்டமைப்புகளும் பிறப்பு அடையாளங்களுமே நிர்ணயித்துவிடுகின்றன. நாடு, ஜாதி, மதம், மொழி வேறுபாடு முதற்கொண்டு பாலின வேறுபாடுவரை அவர்களது பிறப்பிலுள்ள அடையாளங்களை முன்னிறுத்தி அடக்குமுறைகளும் வன்முறைகளும் உலகம் முழுவதும் நிகழ்ந்தேறிக்கொண்டு வருகின்றன. பிறரை நோவினை செய்யாமல் மனிதன் தன் விரும்பிய வாழ்க்கையை வாழ முற்படுகையில், தான் இருப்பு முதற்கொண்டு தன் பக்கமுள்ள நியாயங்களையும் தேவைகளையும் யார்யாருக்கோ முன்வைத்து விளக்கிட முயற்சி செய்ய வேண்டியுள்ளது. கலாச்சார அடக்குமுறைகளினால் ஒருவர் தான் விரும்பிய வாழ்க்கையை முன்னெடுப்பது பெரும் போராட்டமாகவும் புரட்சியாகவும் இருக்கிறது. அதிலும் பன்மைத்துவ சமூகச் சூழலில், கலாச்சார மோதல்கள், முரண்பாடுகளுக்கு நடுவில் உயிர்வாழ்வதே பெரும் சாதனைதான்.
சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்குக் குடியேறிய வர்களின் வாழ்வியல், அரசியல