தன்னை எரிக்கும் கலை

எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புக் கொண்டுவிடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷின் சித்ரங்கதா பற்றித்தான் எழுதப்போகிறேன். ஆனால் ஒரு கதையையோ தருணத்தையோ விவரித்த பிறகு கட்டுரையைத் தொடர்ந்தால் அது வாசகரைச் சுளுவாக உள்ளிழுத்துக்கொள்ளும் என்பது அடிப்படை. அவர் இந்தியத் திரையுலகின் பேரலை. செம்பவளங்கள் மீது நீர்த் தாரைகளை ஓயாது சொடுக்கிக்கொண்டே இருந்தவர். எனக்கோ நெளிந்தாடும் பொன்னிறத் துமிகளுள் பேரொளியில் துலங்குமொரு துமியை மட்டும் கண்டடைவது எங்ஙனம் எனும் தடுமாற்றம்.
The Last Lear படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியை எடுத்துக்கொள்கிறேன். அந்தப் படத்தில் ப்ரீத்தி பிரபலமான நடிகை. அமிதாப் குறுங்குழுவால் மட்டுமே அறியப்பட்ட ஒரு நாடகக் கலைஞர். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவரை இயக்குநரான அர்ஜுன் ராம்பால் தனது அடுத்த படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு
<img class="img-resp