சலனப் படங்களில் தொழில்நுட்பப் புரட்சி

20ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்தில் ‘சலனப்படங்களில்’ ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் முக்கிய திரைப்பட உற்பத்தி நாடுகள் அனைத்திலும் வேகமாகப் பரவியது. ஆயினும், இலங்கையில் அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது புரிந்துகொள்ளத் தக்கதே.

திரைப்படங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற, காட்டப்படுகின்ற முறையில் ஏற்பட்ட தீவிர மாற்றங்கள் தொடர்பான பன்முகப் பிரச்சினைகளை அது எழுப்பியது. முதலில் பாதிக்கப்பட்டது திரைப்படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் அடிப்படைப் பொருளான படச் சுருளேயாகும்.
புதிய தொழில் நுட்பத்தின் வெற்றியினால் படச்சுருள் மறைந்துவிடும்; மௌனப் படங்களைப்போ