ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?
கட்டுரை
ரஜினிகாந்த் அரசியல்வாதியாகிறாரா?
வண்ணநிலவன்
ரஜினிகாந்த், தான் நடித்துள்ள திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஸ் காட்சிகளைப் போலவே, தனது அரசியல் பிரவேசத்தையும் சுவாரசியமான சஸ்பென்ஸாக இத்தனை காலமும் வைத்திருந்தார். அவ்வப்போது தனது ரசிகர்களைச் சந்தித்துக் கட்சி தொடங்குவதைப் பற்றிப் பேசிவந்தார். 1996 முதலே தான் கலந்துகொள்ளும் சினிமா உலக நிகழ்ச்சிகளில் சிறுசிறு அரசியல் விஷயங்களைப் பேசுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அவரது அரசியல் பேச்சுக்கள் ஊடக உலகத்துக்கு அவ்வப்போது தீனியளித்தன. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் செய்தியாளர்கள் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்பதை வா