பதக்கங்கள், பரிசுகள், பகிர்தல்கள்
பதக்கங்கள், பரிசுகள், பகிர்தல்கள்
“இரண்டு குழல் பிட்டுக் கிடைக்குமா?” என்று பருத்தித்துறை ஒடக்கரை பலகாரக் கடைகளில் சாதாரணமாகக் கேட்பதுபோல் ‘இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைக்குமா’ என்ற மறக்கமுடியாத இந்த வார்த்தைகளைக் கேட்டவர் கத்தார் நாட்டின் உயரம் பாய்தல் வீரர் மூட்டாஸ் பார்ஷீம். முடிந்துபோன டோக்கியோ ஒலிம்பிக்ஸில் சொன்ன நினைவில் வைக்கத்தக்க வரிகள் இவை. இனி எதிர்கால விளையாட்டுச் சொல்லாடலில் அடிக்கடி எடுத்துக் கூறப்படும் வாசகமாகவும் இது இருக்கும். இந்தக் கேள்வியைக் கேட்ட மூட்டாஸ் பார்ஷீமும் அவருடைய போட்டியாளரான இத்தாலிய ஜியன்மார்கோ டம்பேறியும் உயரம் பாய்தல் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இருவரும் 2.37 மீட்டர்களைத் தாண்டிவிட்டார்கள். இன்னும் தியாகர