ப்ரீத்தோ
ப்ரீத்தோ
உருது மூலம்: கிருஷன் சந்தர்
இந்தி வழி தமிழில்: பென்னேசன்
நான் இருந்த ரயில் கம்பார்ட்மெண்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த தோரணையில் இருந்தே அந்த மனிதர் முன்பு ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்திருக்க வேண்டும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். பார்ப்பவர்களின் உடனடிக் கவனத்தைக் கவரும்வகையில் அமைந்த கம்பீரத் தோற்றம்; ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான தேகம்; முகத்துக்கு மேலும் பொலிவு கூட்டும் வெண்தாடி; அந்த மனிதர் ஆடம்பரமான கருப்புக் கம்பளி சூட் அணிந்திருந்தார். ரயில் பெட்டியில் தலைக்கும்மேல் ஒளிர்ந்த விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த நேர்த்தியான பக்டியில் (சீக்கியர்களின் தலைப்பாகை) ஒட்டப்பட்ட