‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்...’
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும்...’
திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றுப் பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 மே 7 அன்று நடை பெற்ற பதவியேற்பு விழாவில் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தச் செயல் ஒரேசமயம் மரபை மதிப்பதும் புதுமையானதும் என்று கருதுகிறேன். தான் கடந்துவந்த வழியைத் தனக்கும் தமிழக மக்களுக்கும் நினைவூட்டும் வகையில் இதைச் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். சுதந்திரத்துக்குப் பின்னர் தனி மாநிலமாக உருவான தமிழ்நாட்டில் பதவிவகித்த முதலமைச்சர்களில் – ராஜாஜி